
சென்னை,
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே கர்நாடக கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம்.
இதன் காரணமாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இன்று மாலைக்குள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பெரும்பாலான அதிமுகவினர் வரவேற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சியினரும் தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு குறித்து, தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சசிகலா மீது சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel