சென்னை:
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கொடுக்கப்பட்ட கடிதத்தில் உள்ள எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் உண்மையானது தானா என பரிசோதிக்கும் பணியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த புகாரை தொடர்ந்து இந்தப் பணி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக எம்எல்ஏக்கள் பதவியேற்றபோது கையெழுத்திட்ட படிவங்களை சட்டப் பேரவைச் செயலகத்திடம் இருந்து ஆளுநர் மாளிகை கேட்டுப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் கொடுத்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு புகார்கள் தொடர்பாகவும் ஆளுநர் விசாரணை நடத்தி வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே ஆட்சி அமைக்க அழைப்பதில் என்பதில் ஆளுநர் தாமதம் ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.