தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள் அதிகாரப்போட்டி உச்சத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று தமிழக ஆளுநர் வித்தியாசாகரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியே சந்தித்து தங்களுக்கே சட்டசபையில் மெஜாரிட்டி இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று மத்திய அரசுக்கு ஆளுநர் வித்தியாசாகர் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, “ஆளுநர் இன்னொரு அறிக்கை அனுப்புவார்” என்று தெரிவித்தார்.
இந்த சூழலில், இன்று இரவு ஆளுனர் இரண்டாவது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் மூன்று பக்கமுள்ள அந்த அறிக்கையில் “தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது” என்று தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்தத்த தகவலை தற்போது ஆளுனர் மாளிகை மறுத்துள்ளது. “இன்று மத்திய அரசுக்கு ஆளுனர் அறிக்கை ஏதும் அனுப்பவில்லை” என்று ஆளுனர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.