
சென்னை:
தமிழ்நாட்டை தனி நாடாக மாற்றி விடாதீர்கள் என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.
சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம் என நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் பல முக்கிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் மாதவன் ஆகியோருக்கும் தனித்தனியாக டுவிட் செய்துள்ளார்.
அதில், ‘நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது , உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் குற்றம் சாட்டுவதை விடுத்து நாம் குற்றமறக் கடமை செய்வோம் எனவும் நடிகர் கமல் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel