ஜெர்மனியை ஹிட்லர் ஆண்ட நேரத்தில் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது அல்லவா? அப்போது போலந்தை ஆக்கிரமித்த ஜெர்மனி, அவுஸ்விட்ச் என்ற இடத்தில் மரண முகாமை அமைத்தது. அதாவது ராணுவ முகாம்.
இதன் வேலை, யூதர்களைப் பிடித்து வந்து கொத்துக் கொத்தாக கொல்வதுதான். இந்த கொலை முகாமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த கொலைகளை திறம்பட செய்ய (!) 9000 ஜெர்மனி ராணுவத்தினர் இங்கு இருந்தனர்.
அவர்களில் சிலரது படங்கள் கிடைக்கவே தற்போது அந்த படங்களை போலந்தின் தேசிய நினைவு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.