பெண்களிடம் தவறாக நடந்ததாக மேகாலயா கவர்னர் சண்முகநாதன் மீது ஆளுனர் மாளிகை பணயாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டதை பூர்வீகமாக கொண்டவர் சண்முகநாதன். இவர் பல உயர் பதவிகளை வகித்தவர். கடந்த 2015 ஆண்டு மே மாதம் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்ட இவருக்கு , மணிப்பூர் மாநிலத்தையும் கவனிக்கும் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டது.
இந்நிலையில் , சண்முகநாதனின் மீது, ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண்மணி ஒருவர்” ஆளுநர். சண்முகநாதன் ராஜ் பவன் மாளிகையை லேடீஸ் கிளப்பாக மாற்றி விட்டார். வேலை தேடி வரும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
இதே குற்றச்சாட்டுக்களைக் கூறி, கவர்னர் சண்முகநாதனை பதிவியைவிட்டு நீக்க வேண்டும் என்று கோரி, பிரதமருக்கு ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 80 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.
இந்த குற்றசாட்டுகளை , மறுத்துள்ள சண்முகநாதன் தாம் பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.