டெல்லி;
நிலுவையில் இருந்த அனைத்து கருணை மனுக்கள் மீதான முடிவுகளையும் பிரனாப் முகர்ஜி அறிவித்துவிட்டார்.
குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் குடியரசு தலைவர்களாக இருந்த பிரதீபா பட்டீல், அப்துல் கலாம், கே.ஆர்.நாராயணன் ஆகியோரது பதவி காலம் முதல் நிலுவையில் இருந்த கருணை மனுக்கள் மீது தற்போதைய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி தனது இறுதி முடிவை அறிவித்துவிட்டார்.
மொத்தம் 32 மனுக்களில் 28 மனுக்களை நிராகரிப்பு செய்துவிட்டார். இதர 4 மனுக்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தார்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அபசல் குரு, மும்பை தாக்குதல் வழக்கில் முகமது அஜ்மல் கசாப், 13 குடும்ப உறுப்பினர்களை கொன்ற குர்மித் சிங் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் குறிப்படத்தகுந்தவையாகும்.