சென்னை,
நாளை நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
நாளை குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளதால் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜன., 26 (நாளை) குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
விழாவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாத என தமிழகம் முழுவதும் போலீசார் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 1.12 லட்சம் போலீஸார் தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிப்பாட்டு தளங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.
கலவரம் காரணமாக பிரச்னைக்குரிய பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.