ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி போராடிய தமிழக இளைஞர்களை பொறுக்கிகள் என்று தரம்தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வந்தார் பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி. மேலும் முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டக்காரர்களை சந்தித்து இருக்க வேண்டும்’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்ததை முட்டாள்த்தனமானது என்றும் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பதிவில், “ தமிழ் பொறுக்கிகள் என்னை மெரினாகடற்கரைக்கு வர துணிச்சல் இருக்கிறதா எனக் கேட்கின்றனர். கடவுள்(சிவா) போலீஸை மெரினாவுக்கு அனுப்பினார்.
பொறுக்கிகள் அய்யோ, அய்யோ என அலறிக்கொண்டே சென்றனர். இப்போது என்னை தமிழ்நாட்டுக்கு வருகிறாயா என பொறுக்கிகள் கேட்கிறார்கள்?. அதை கடவுள்தான் முடிவு செய்வார்.
மெரினாவில் இருந்த முஸ்லிம் போராட்டக்காரர்களுக்கு போலீசாரின் தடியடி மூலம் நல்ல செய்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு நடிகர் கமல் ஹாசன் பதில் அளித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ “ஏய் சாமி. நான் தமிழ்நாட்டுக்காரன். முதல்வர்மட்டுமல்லாது,
அரசியல்வாதிகளும் மக்களை கண்டிப்பாக சந்தித்து இருக்க வேண்டும். அரசாள்பவர்கள் மக்களிடம் பணிந்துதான் செல்ல வேண்டும். அதில் ஏன் முதல்வர் செய்ய மறுக்கிறார்?” என்றார்.
பதில்அளிக்கப்போவதில்லை
அடுத்து வெளியிட்ட பதிவில், “ சாமியின் அவதூறுகளுக்கு நான் பதில் அளிக்க போவதில்லை என முடிவு எடுத்துவிட்டேன்.
நீங்கள் அதிகார வர்க்கத்தில் இருக்கிறீர்கள். காமராஜர், அண்ணா, ராஜாஜி எனது தந்தைகள். மோதி மிதித்து விடு பாப்பா” என்று தெரிவித்தார்.
அமைதி
அதன்பின், “ அமைதி.. ஒரு பூடகமான சொல், அமைதி… அது பேசாதிருப்பதா?, செயலற்றிருப்பதா?; தமிழலில் எழுதினாலும் நாட்டுக்கே பொருந்தும் உலகுக்கே.. வெல் தமிழா” என பதிவிட்டார்.
மேலும், தெரிவித்த நடிகர் கமல் ஹாசன், “ நான் தமிழ்பொறுக்கிதான், ஆனால், டெல்லியில் போய் பொறுக்கவில்லை” என்று “பொறுக்கி” சுவாமிக்கு பதிலடி கொடுத்தார்.
இந்தநிலையில் மத்திய தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனை கமல்ஹாசன் திடீரென நேரில் சந்தித்தார்
அப்போது தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போரட்டங்கள் குறித்து பேசியவர், “பொறுக்கி” சுவாமியின் தேவையற்ற தமிழர் விரோத போக்கு குறித்தும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். மேலும், இது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.