சென்னை,
இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் கவர்னர் உரை வாசிப்பது வழக்கம். அதுபோல் இன்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கவர்னரின் உரை இடம்பெற்றது.

அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஜல்லிக்கட்டு போராட்டத்தால், சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட முன்வரைவு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட இருப்பதால், இன்று மாலை 5 மணிக்கு சிறப்புகூட்டம் கூட்டப்படுவதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.
Patrikai.com official YouTube Channel