ஜல்லிக்கட்டு தடையை நீக்க மதுரை தமுக்கம் மைதானத்தில் போராடி வந்தவர்களில் பலர், காவல்துறையின் அறிவிப்பை ஏற்று கலைந்து சென்றார்கள்.
ஆனால் இன்னும் சில நூறு பேர் போராட்டத்தை தொடர்கிறார்கள். ஓரமாக அமர்ந்து போராட்டத்தை நடத்துங்கள் என்று காவல்துறையினர் சொன்னதை போராட்டக்காரர்கள் கேட்கவில்லை.
போராட்டக்காரர்கள் அமைத்திருந்த தடுப்பு வேலியை காவல்துறையினர் அகற்ற முற்பட்டனர். அதை போராட்டக்காரர்கள் தடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel