
ஜல்லிக்கட்டு தடை நீக்க மாணவர்களும், இளைஞர்களும் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் நாளை ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்க தலைவர் வெள்ளையன் அறிவித்தார். தொடர்ந்து திரையரங்கங்களும் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. அரசு ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர்.
இந்த நிலைியல் நாளையய போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ , கால்டாக்சி வாடகை வேன்கள் இயங்காது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாளை முழுமையாந பந்த்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பேருந்துகள் இயங்குமா என்பது குறித்து இதுவரை ஏதும் அறிவிப்பு வரவில்லை.
Patrikai.com official YouTube Channel