உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மாவட்டத்தில் ஏழு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதில் திரைப்பட இயக்குநர் கௌதமன் காயமடைந்தார்.
இந்நிலையில் மதுரை ஆலங்குளத்தில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு ஜல்லிக்கக‘ட்டு துவங்கியது. . ஆலங்குளம் கண்மாயில் தற்காலிகமாக வாடிவாசல் அமைத்த அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட காளைகளை களத்தில் இறக்கினர்.
காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காவல்துறையினர் தடுத்தாலும் அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் என்று ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.
அலங்காநல்லுரிலும் தடையை மீறி ,இன்று அதிகாலையிலேயே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வழக்கமாக நடைபெறும் இடத்தில் போலீசார் குசிக்கப்பட்டுள்ளதால், வேறொரு இடத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
மதுரையை அடுத்த முடக்கத்தான் கிராமத்திலும் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்