ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்தியுள்ள பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததாக, நடிகை த்ரிஷாவை, தரம் தாழ்ந்து சிலர் விமர்சித்தனர். த்ரிஷா எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதாக போஸ்டர் வடிவிலான பதிவு ஒன்றை நேற்று சமூக வலைதளங்களில் உலவவிட்டனர்.
இதையடுத்து த்ரிஷா, “நான் பீட்டாவை ஆதரிக்கவில்லை. அதே நேரம், பெண்களைக் கொச்சைப்படுத்துபவர்கள், தமிழ்க்கலாச்சாரம் பற்றி பேச வெட்கப்பட வேண்டும்” என்று ட்விட்டினார்.
இவருக்கு நடிகர் கமல்ஹாசனும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், “ஜல்லிக்கட்டு வேண்டும். அதே நேரம், தரக்குறைவாக எவரையும் விமர்சிக்கக்கூடாது” என்று பொருள்படும் வகையில் ட்விட் செய்திருக்கிறார்.
இ்ந்த நிலையில், விஜய் டிவியின் தொகுப்பாளரான பாவனா திரிஷாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது போன்று பதிவிடுபவர்கள் கோழைகள். தங்களை யார் என்று வெளிக்காட்டி கொள்ளாமல் மறைமுக அடையாளங்கள் மூலம் தாக்குவார்கள். இதை பெரிதுபடுத்தாமல் நீங்கள் உறுதியாக இருங்கள் திரிஷா” பாவனா பதிவிட்டுள்ளார்.