சென்னை,
தமிழக சட்டப்பேரவை வரும் 23ந்தேதி கூடுவதாக சட்டசபை செயலாளர் அறிவித்து உள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இந்த மாதம் 23ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தின் முதல்நாள் காலை 10 மணிக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றி, சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதற்கான அறிவிப்பிப்பை சட்டசபை செயலர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தபிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவாகும்.
முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நிறைவுபெறும். இரண்டாவது நாளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்க இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து கவர்ன உரை மீதான விவாதங்கள் நடைபெறும்.
இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.