
சென்னை,
அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு தடை ஜனவரி 30ந்தேதி வரை நீடிப்பு செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு, விளை நிலங்களை வீடு மனைகளாக மாற்ற தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தது.
வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நிலங்களை வரை முறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், இரண்டு வாரகாலம் கூடுதல் அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், இரண்டு வார கால அவகாசம் அளித்ததுடன், இது தொடர்பான அறிக்கையை வருகிற 30-ம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்டி ருந்த தடையும், அன்றைய தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]