
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், அக் கட்சியின் தலைமையகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடந்துகொண்டிருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட மூர்த்த தலைவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார், ராஜ்யசபா முன்னாள் துணை சபாநாயகர் ரகுமான்கான் ஆகியோரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்தும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலையை தடுப்பது, கள்ளப்பணம் ஒழிப்பதாக கூறி, செல்லாத நோட்டு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Patrikai.com official YouTube Channel