
சென்னை,
அதிமுக கட்சி, சசிகலாவின் குடும்ப சொத்தாக மாறியது உள்ளது என்று தமிழக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நாளையோ அல்லது ஓரிரு தினங்களிலோ பொதுச்செயலாளராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.
சசிகலா தேர்வு செய்யப்பட்டது குறித்து, தமிழக ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசிகரன் கூறியதாவது,
அதிமுக, சசிகலா குடும்பத்தாரின் குடும்ப சொத்தாக மாறிய அவலம் அரங்கேறி உள்ளது என்று ஆதங்கப்பட்டார்.
Also read
Patrikai.com official YouTube Channel