கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆயுதம்

தருமபுரி,
ருமபுரி அருகே ரூபாய் நோட்டுக்கள் மாற்றி கொடுக்கும் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தருமபுரி அருகே கமிஷன் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பலை சேர்ந்த மூன்று தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பணம் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக் களை கருப்பு பண முதலைகளிடம் இருந்து வாங்கி, வங்கி அலுவலர்களை கைக்குள் வைத்துக்கொண்டு கமிஷன் அடிப்படையில் புதிய நோட்டுக்களை மாற்றிகொடுக்கும் தரகர்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நாடு முழுவதும் இதுபோல தரகர்களாக செயல்பட்ட பலபேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தருமபுரி அருகே உள்ள பெண்ணகரத்தில் தகர்கள் கும்பல் ஒன்று போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பென்னாகரம்  பகுதியை சேர்ந்த மதி, பிரபு,செல்வக்குமார் ஆகிய மூவரும் ஓசூரிலிருந்து சொகுசு கார் மூலம் பழைய 500 ரூபாய் நோட்டுகள் 32 லட்ச ரூபாய் நோட்டுக்கட்டுகள் எடுத்துக்கொண்டு, காரிமங்கலம் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.
அதே ஓட்டலில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் ஒரு கும்பல் தங்கியிருந்தது. அவர்களிடம் தாங்கள் கொண்டு வந்திருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, புதிய நோட்டுக்கள் மாற்றினர். அப்போது  கமிஷன்  தொடர்பாக இரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள ஒருவர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் நோட்டு மாற்றும் கும்பலை சேர்ந்த  மூவரை செய்தனர். அவர்கள்  பயன்படுத்திய 2 சொகுசு கார்கள், இருச்சக்கர வாகனம், புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
புதிய பணம்,  20 லட்சத்து 60 ஆயிரமும், பழைய 500 ரூபாய் நோட்டு கட்டுக்கள்  மற்றும் கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் யாருக்காக மாற்ற கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், யார் கொடுத்து அனுப்பியது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.