சென்னை,
மிழக தலைமை செயலாளர் வீட்டில் மத்திய வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தியதை தொடர்ந்து அவரது சட்ட ஆலோசகர் வீட்டிலும் இன்று அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
தொடரும் ரெய்டு காரணங்களால் தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்லாது அதிகாரிகளும் பதட்டத்தில் காணப்படுகின்றனர்.
தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ்  மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நேற்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அவரது வீட்டில் இருந்து  லட்சக்கணக்கான ரூபாய்களும், தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதையடுத்து, ராம்மோகன் ராவ் தலைமை செயலாளர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழக அரசு அதற்கான அதிரடி முடிவை எடுத்தது.

அதைத்தொடர்ந்து, ராம்மோகன் ராவுக்கு சட்ட ஆலோசகராக இருந்தவரும், பிரபல புரோக்கருமான அமலநாதன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் இன்று காலை முதல் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான நாகராஜன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தமிழக அரசு அதிகாரிகள் மட்டத்திலும், அரசியல் வட்டத்திலும்  படபடப்பும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.