சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.131 கோடி பணம் மற்றும் 170 கிலோ தங்கம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் ரூ.30 கோடி மதிப்புள்ள புதிய ரூ. 2000 நோட்டுகள் எப்படி வந்தது என்பது பற்றியும், உதவிய வங்கி அதிகாரிகள் பற்றியும் சேகர் ரெட்டியிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
 
ED files cases against Sekar Reddy . Income Tax raid on his premises found  cash of 131 crores and gold of 170 Kilograms. He also possessed 30 crores of new currencies of Rs.2000 denomination.