சென்னை,
ங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில்  ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் மளமளவென அவுட் ஆகினர்.

இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்தது.  இளம் வீரர் கருண் நாயர்  முச்சதம் அடித்து வரலாற்று சாதனை புரிந்தார்.  759 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை இந்தியா  டிக்ளேர் செய்தது.
அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியினர் ஆடத்தொடங்கினார். நேற்றைய ஆட்ட முடிவில்  விக்கெட் இழப்பின்றி 12 ரன் எடுத்தது. தொடர்ந்து இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் ரரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். அவரது அசாத்தியமான  பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் மளமளவென அவுட் ஆகி வெளியேறினர்.

இன்றைய ஆட்டத்தில்  ஜடேஜா 48 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து  வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி 88 ஓவருக்கு 207 ரன்னுடன் ஆட்டமிழந்தது.
இந்தியா இன்னிங்ஸ் மற்றும்  75 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும்,  இதுவரை விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று 4- 0 என்ற கணக்கில் சாதனை படைத்துள்ளது.