போபால்:
யுர்வேதம் மற்றும் யுனானி டாக்டர்கள் இனி ஆங்கிலம் மருத்துவம் என்ற அலோபதி மருந்து வகைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய மத்தியபிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான இரண்டு மசோதாக்களை அம்மாநில அரசு சட்டமன்றத்தில் 9ம் தேதி நிறைவேற்றியுள்ளது.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள டாக்டர்கள் பற்றாகுறையை தீர்க்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில சுகாதார துறை அமைச்சர் ருஸ்தம் சிங் கூறினார்.

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பொறுப்பு வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலா பச்சச்சன் கூறுகையில், வியாபம் ஊழல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த ஊழல் வெளியில் வந்த பிறகு ஆயிரம் டாக்டர்கள் தங்களது மருத்துவ பட்டங்களை இழந்துள்ளனர். எம்பிபிஎஸ் படிப்பை முடிக்க 5 ஆண்டுகள் ஆகும். அதனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் மூலம் 3 மாதத்தில் அவர்களுக்கு பயிற்சி அளித்துவிட முடியும். இந்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். .. என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைமை கொறடா ராம்நிவாஸ் ரவாத் கூறுகையில்…
இவை ஆட்சேபனைக்குறிய மசோதாக்கள். நாட்டு மக்களின் உடல் நலத்தோடு அரசு விளையாடுகிறது. குறைந்தபட்சம் இந்திய மருத்துவ கவுன்சிலில் ஒப்புதலை கூட மாநில அரசு கேட்கவில்லை.

போதுமான ஊதியம் வழங்கப்படாதது தான் டாக்டர்கள் அரசுப் பணிக்கு வர தயங்குகின்றனர். அதே சமயம் மாநில அரசுக்காக பணியாற்றும் குஜராத்தை சேர்ந்த தீபக் அறக்கட்டளை டாக்டர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது…. என்று தெரிவித்துள்ளார்.
தீபக் அறக்கட்டளை டாக்டர்கள் உதவியுடன் சுகாதார சேவையை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது என்று எதிர்கட்சி தலைவர் பச்சச்சன் கூறினார்.
72 வகையான மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக ஏற்பாடு தான். டாக்டர்கள் தேவை பூர்த்தியான பிறகு இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இத்தகைய நடவடிக்கை அமலில் இருப்பதாக அமைச்சர் ருஸ்தம் சிங் சட்டமன்றத்தில் விளக்கமளித்தார்.