டில்லி,
பிரதமரின் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு பிரபல சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மனைவி ஜெயபச்சன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமிதாப் மோடியின் அறிவிப்பை வரவேற்றுள்ள நிலையில் அவரது மனைவி ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததை அடுத்து நடுத்தர, ஏழை எளிய மக்கள் அல்லாடி வருகின்றனர். அன்றாட செலவுக்கே பணம் இல்லாத நிலையில் கடும் அவதஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர்.

இதுபற்றி மோடி பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, கடந்த ஒரு வாரமாக நாடாளு மன்றத்தை நடைபெற விடாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயபாச்சனும் கலந்து கொண்டார். ஜெயாபச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிங்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் ரூபாய் நோட்டு தடைக்கு அமிதாப் பச்சன் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது மனைவி ஜெயாபச்சன் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel