மதுரை,
ரட்டை குவளை முறை தமிழகத்தின் சாதிய கலாச்சாரத்திற்கு சான்றுபோல, இரட்டை கல்லறை முறையும் கிறிஸ்தவ மதத்தின் ஜாதிய பிரிவுகளுக்கு ஒரு சான்றாக திகழ்கிறது.
சாதி இரண்டொழிய வேறில்லை என்றும்,  இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தார் என்று பாடிய ஔவையும், ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியும் இன்னும் எத்தனையோ சமூகசீர் திருத்த வாதிகள் படித்துப்படித்துச்சொன்ன கருத்துக்களை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, இன்றும்… இன்னும் ஜாதிகளை பிடித்து தொங்கிக்கொண்டே நமது மக்களின் வாழ்க்கை பயணம் சென்றுகொண்டிருக்கிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக,  மதுரை அருகே உள்ள சிவகங்கை பகுதியில் கிறிஸ்வர்களுக்குள்ளேயே இரட்டை கல்லறை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 
சிவகங்கை கத்தோலிக்க மறை மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர் பகுதியில் இருந்து (தேவேந்திர குல வேளாளர்) எவருக்கும் “அருட் பொழிவு” குரு பட்டம் வழங்க கடந்த  28 வருடங்களாக மறுக்கப்பட்டு வருகிறது.
குரு பட்டம் பெறுவதற்காக 13 வருட பயிற்சி பெற்ற பிறகும்,  மைக்கேல் ராஜா என்ற தலித் கிறிஸ்தவருக்கு அருட் பொழிவு பட்டம் மறுக்கப்பட்டு,  திருச்சி குருமடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவரைப்போலவே, ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்கள் குரு மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
cemetry1
இதுபோன்ற செயல்களை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு பேரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தின்ர்.
13 ஆண்டுகள் பயிற்சி பெற்ற குரு மாணவரை எவ்வித ஆதாரமும் இன்றி, விசாரணையுமின்றி, செய்யாத குற்றத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் மறை மாவட்டத்தை விட்டு வெளியேற்றியது அநீதியானது.
இந்த அநீதிக்கு எதிராகவும் சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகத்தின் தீண்டாமைக் கொடுமை யைக் கண்டித்தும், மைக்கேல் ராஜா வுக்கு நீதி கேட்டும்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தலைவர் பி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:
கத்தோலிக்க மதம் உலகளாவிய மதம். சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியாவில் கல்வி உள்ளிட்ட உதவிகளை கிறிஸ்தவ சபைகள் மக்களுக்கு வழங்கின.
இந்தப் போராட்டம் மறை மாவட்ட கத்தோலிக்க நிர்வாகத்தில் நிலவும் தீண்டாமையை கைவிடவும், மைக்கேல் ராஜாவுக்கு நீதி கேட்டும் நடப்பதாகும்.
பிரச்சினையை  தீர்க்க வேண்டியது கத்தோலிக்க சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு.
இந்து மதத்தில் நிலவும் ஒடுக்கு முறைகள் காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீண்டாமை கொடுமை தொடர்கிறது.
இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகம்  முழுவதும் இரட்டை குவளை, இரட்டைக் கல்லறை என 88 வகையான தீண்டாமைக் கொடுமைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்களை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல் மதுரை கே.புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. அண்ணா துரை தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் கு.ஜக்கையன், தலித் கிறிஸ்தவமக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வேதராஜ், தமிழ்அகிலன் ( புரட்சி புலிகள்), சாதி ஒழிப்புமுன்னணியின் மாவட்டச் செய லாளர் தெய்வம்மாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் க.கண்ணன், தலித் கிறிஸ்தவ ஒருங்கிணைப்பாளர் சந்தனமேரி ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.
நன்றி: தீக்கதிர்.