டில்லி:
“ரூபாய் நோட்டு செல்லாது” பிரச்சினை தொடர்ந்தால், நாட்டில் கலவரம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு உளவுத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதேகருத்தை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
புழக்கத்திற்கு ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் மக்கள் தவித்துவருகிறார்கள். ஆங்காங்கே தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாட்டின் பல இடங்களில் சிறு சிறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சில இடங்களில் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை எடுப்பதும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் பொது நல வழக்குகளுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நாட்டில் கலவரம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக நீதிபதிகள் எச்சரித்தார்கள்.
.இதேபோன்ற எச்சரிக்கையை மத்திய உளவுத்துறையும், (ஐ.பி.) அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசுக்கு உளவுத்துறை அளித்த அறிக்கையில், “நாடு முழுதும் கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. மக்ககளை கலவரத்திற்கு தூண்டும் வேலையை தொடர்ந்து சில கட்சிகளும், அமைப்புகளும் முயன்று வருகின்றன” தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.