விசாகப்பட்டினத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. முதல் இன்னிங்ஸ்-யை துவங்கிய இந்திய அணி, 129.4 ஓவர்களில் 455 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது, 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. உமேஷ் யாதவ் பந்தில் பேர்ஸ்டோ 53 ரன்களில் அவுட் ஆனார். உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார் அஸ்வின். அன்சாரியின், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆனது.
ஆனால், இந்தியா பேட்டிங்-யைத் தேர்வு செய்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ்-யை துவங்கிய இந்தியா, 40 ரன்களுக்குள் விஜய், ராகுல், புஜாரா ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் விராட் கோலி மறுபக்கம் ரன் வேட்டையில் ஈடுபட்டார். இன்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 34 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை மட்டும் இழந்துள்ளது. 298 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.