டோக்கியோ 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட உள்ள பதக்கங்கள், செல்போன் போன்ற மின்னணு பொருள்களில் இருந்து எடுக்கப்படும் உலோகங்ககளை மறுசுழற்சி செய்து தயாரிக்க உள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் எண்ணத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்தப்போவதாக போட்டியை நடத்தும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், எல்லா பதக்கங்களும் அவ்வாறு தயாரிக்கப்படுமா அல்லது குறிப்பிட்ட பதக்கங்கள் மட்டும் மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட உள்ளதா என தெளிவாக கூறவில்லை. 2010-ஆம் ஆண்டு வான்கூவரில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டியில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம், வெண்கலப் பதக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும், இவ்வாறு தயாரிக்கப்படும் பதக்கங்களால் போட்டிக்கான செலவு குறையுமா என தெளிவாக விளக்கவில்லை.