இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. மொயீன் அலி 99, பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்திருந்தனர்.
இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், ஹமீது ஆகியோர் கொடுத்த இரண்டு கேட்ச்-யை தவற விட்டது இந்த அணிக்கு சற்று சறுக்கலை தந்தது. மேலும், உமேஷ் யாதவ் வீசிய பந்து ஜோ ரூட்டின் பேடில் பட்டதையடுத்து, நடுவர் நட் அவுட் என அறிவித்தார். டிஆர்எஸ் முறையில் மேல்முறையீடு செய்தும் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை துங்கிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை, 120 ஓவருக்கு 6 விக்கெட்டுகள் இழந்து 450 ரன்கள் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களுடனும், கிரிஸ் வாக்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்றைய நாள் ஆட்டத்தில் சமி 2 விக்கெட்டுகளை கைபற்றி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.