trumb
வாஷிங்டன்,
லகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்கனியை எட்டிப்பிடித்தார். 266 மாகாணங்களில் வெற்றிபெற்று அதிபர் பதவியை பிடிக்கிறார்.
குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்,  தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் , ப்ளோரிடா, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் வெற்றிபெற்றுள்ளதால், வெள்ளை மாளிகை டிரம்ப் வசமாகிறது.
வெற்றிக்கு தேவையான 270 இடங்களில் 266 இடங்கள் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையை கைப்பற்றுகிறார் டிரம்ப்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் சில மணி நேரம் வித்தியாசம் உள்ளது. நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில், கிழக்கு மாகாணங்களில் முன்கூட்டியும் மேற்கு மாகாணங்களில் பிந்தியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அந்தந்த மாகாண நேரப்படி காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று வாக்குமுடிவு அறிவிக்கப்பட்டு, யார் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டு விடும்.
தற்போதைய நிலவரப்படி ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் 266  இடங்களிலும்,
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி 218 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆனால், வெற்றிக்கு தேவை 270 இடங்களே போதுமானது.
பொதுவாக அமெரிக்காவின்,  ப்ளோரிடா, வடக்கு கரோலினா, ஓஹியோ, அயோவா  மாகாணங்களின் வெற்றியை வைத்தே, வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படும் என கருதப்படுகிறது. அப்படி பார்க்கும்போது, இந்த  மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் அவர் வெற்றி பெறுவது உறுதியானது.
ட்ரம்ப் வெற்றி பெற்ற இடங்கள்:
ப்ளோரிடா (29), ஜார்ஜியா (16), ஓஹியோ (18), வடக்கு கரோலினா (15), வடக்கு டகோடா (3), தெற்கு டகோடா (3), நெப்ராஸ்கா (4), கான்ஸாஸ் (6), ஒக்லஹாமா (7), டெக்சாஸ் (38), வயோமிங் (3), இண்டியானா (11), கெண்டக்கி (8), டென்னிஸ்ஸி 911), மிஸ்ஸிஸிப்பி (6), அர்கான்ஸாஸ் (6), லூசியானா (8), மேற்கு வர்ஜீனியா (5), அலபாமா (9), தெற்கு கரோலினா (9), மான்டோனா (3), இதாகோ (5), மிசௌரி (10).
ஹிலாரி வெற்றி பெற்ற இடங்கள்:
கரோலினா (55), ஹவாய் (4), இலினாய் (20), நியூயார்க் (29), நியூ ஜெர்ஸி (14), மேரிலாண்ட் (10), கொலம்பியா (3), வெர்மான்ட் (3), மசாசூட்ஸ் (11), கனக்டிக்கட் (7), டெல்வாடே (3), கொலராடோ (9), நியூ மெக்சிகோ (5), வெர்ஜீனியா (13), ஓரேகான் (7), வாஷிங்டன் (12), ரோட் ஐஸ்லாண்ட் (4).
hilary
அமெரிக்க அதிபரை தேர்வு செய்வது எப்படி?
நமது நாட்டை போல,  அமெரிக்க அதிபரை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பது இல்லை.
அமெரிக்காவில் உள்ள  மாகாணங்களில் தேந்தெடுக்கப்படும் தேர்வாளர்களை பொறுத்தே அமெரிக்க அதிபராக யார் வருவார்கள் என தீர்மானிக்கப்படும்.
அமெரிக்காவின்  50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் இருந்து, மொத்தம்  538 தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களை தேர்ந்து எடுக்கவே நேற்று தேர்தல் நடைபெற்றது.
அந்தந்த மாகாணங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப தேர்வாளர் வாக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியாவில் 55 தேர்வாளர் வாக்குகளும் சிறிய மாநிலங்கள், கொலம்பியா மாவட்டத்தில் 3 தேர்வாளர் வாக்குகளும் உள்ளன.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் பாதியளவான 269-க்கு ஒன்று கூடுதலாக அதாவது 270 வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.