மிகுந்த பரபரப்புகளுக்குடையே அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் கருத்துக் கணிப்புகள் கூறுவது போல ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால் அவரே அமெரிக்காவின் முதல் பெண் அதிபராவார். அவரது அரசியல் வாழ்க்கையில் அவரது வளர்ச்சிக்கு 5 இந்தியப் பெண்கள் பெரும் பங்கற்றி வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஹிலாரிக்கு மிகவும் நெருக்கமான அந்த 5 இந்தியப்பெண்கள் பற்றி பார்ப்போம்.

huma

ஹியூமா அபிதின்: 40 வயதான ஹியூமா, ஹிலாரியின் 2016-ஆம் வருட அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்கான கமிட்டியில் துணைத்தலைவராக இருப்பவர் இவர். கடந்த 1996 ஆம் ஆண்டு, தனது 19 வயதில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவியாய் இருந்தது முதல் ஹிலாரியுடன் இருப்பவர். இன்றுவரை ஹிலாரிக்கு மிகவும் நெருக்கமானவர். இவரை “சின்ன ஹிலாரி” என்று அழைப்பார்களென்றால் இவருக்கு இருக்கும் செல்வாக்கு எத்தகையது என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
 

neera

நீரா தண்டன்: அமெரிக்க வளர்ச்சி மையம் அமைப்பின் தலைவராக செயல்படுபவர். இவரும் நீண்ட காலமாக ஹிலாரியுடன் இருப்பவர். ட்விட்டரில் குடியரசுக் கட்சிக்காக மும்மரமாக பிரச்சாரம் செய்து வருபவர். ஹிலாரியின் 2008 பிரச்சார கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர். ஹிலாரிக்கு அதிகாரபூர்வமற்ற ஆலோசகராகவும் ஹிலாரிக்கு ஆக்கபூர்வமான விமர்ச்சகராகவும் செயல்பட்டு வருபவர். ஹிலாரி சம்பந்தமாக அவரது பிரச்சார கமிட்டியின் தலைவர் ஜான் பொடெஸ்டாவுக்கு இவர் எழுதிய சில சர்ச்சைக்குரிய ஈமெயில்கள் விக்கி லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

shefali

ஷெஃபாலி ராஸ்தன் துக்கல்: 2011-இல் கலிபோர்னியா மாகாணத்தின் முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவராக கருதப்பட்டவர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் சின்சினாட்டி, சிகாகோ, நியூயார்க் மற்றும் போஸ்டன் ஆகிய இடங்களில் வளர்ந்தவர். இவர் ஹிலாரிக்காக தேசிய நிதி கூட்டமைப்பில் பணியாற்றியவர். 2016 தேர்தலில் மட்டுமன்றி ஹிலாரியின் 2008 பிரச்சார கமிட்டியிலும் உறுப்பினராக இருந்தவர்.
 

maya

மாயா ஹாரிஸ்: இவர் ஒரு வழக்கறிஞர், ஹிலாரியின் பிரச்சாரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சீனியர் பாலிசி அட்வைசர்களில் ஒருவர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இவர் ஹிலாரிக்காக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் ஓட்டுக்களை ஹியாரியின் பக்கம் இழுக்க இவரது சேவை உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 

mini

மினி திம்மராஜூ: பள்ளிப்பருவத்திலிருந்தே மகாத்மா காந்தியின் மீதும் அவர் கொள்கைகளின் மீதும் மிகுந்த பற்று கொண்ட மினி திம்மராஜூ, ஹிலாரிக்கான தேர்தல் பிரச்சார கமிட்டியில் முன்னணியில் இருப்பவர். பெண்கள் ஓட்டுக்கள் ஹிலாரியின் பக்கம் திருப்புவதில் மினி திம்மராஜூவின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்று நம்ப்பப்படுகிறது.