வறுமை காரணமாக செய்தித்தாள் விற்ற பெண் கடின உழைப்பிபினால் ஐஐடியில் நுழைந்து தொழில்நுட்ப படிப்பை வெற்றிகரமாக முடித்த கதை பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

shivangi

உத்திரப் பிரதேச மாநிலம் தேகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஷிவாங்கி. அரசு பள்ளியில் படித்துக்கொண்டே குடும்ப வறுமை காரணமாக தந்தையுடன் இணைந்து செய்தித்தாள்கள் விற்றவர். புகழ்பெற்ற ஐஐடி கோச் ஆனந்த் குமார் நடத்தும் சூப்பர்-30 என்ற பயிற்சி நிறுவனம் குறித்து கேள்விப்பட்டு ஷிவாங்கி அவரை அணுகியிருக்கிறார். ஆனந்த் குமார் அவரை தனது பயிற்சிப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளவே தனது திறமையை நிரூபித்து ஐஐடிக்குள் நுழைந்துவிட்டார் ஷிவாங்கி.
திறமையும் கடின உழைப்பும் நிறைந்த தனது மாணவி ஷிவாங்கி தற்பொழுது ஐஐடி படிப்பை முடித்து வெற்றிகரமாக வெளியேறியிருப்பதை பெருமிதத்துடன் தனது பேஸ்புக்கில் பதிந்திருக்கிறார் ஆனந்த் குமார். ஷிவாங்கி தனது குடும்பத்தில் ஒரு அங்கமாகி விட்டதாகவும், தனது தாயார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது ஷிவாங்கி அவர் கூடவே இருந்து அவரை கவனித்துக் கொண்டதாகவும் அப்பதிவில் ஆனந்த் குமார் தெரிவுத்துள்ளார். ஷிவாங்கியைப் பிரிவது பெற்ற மகளைப் பிரிவதுபோல இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உணர்ச்சிகரமான அதே வேளை படிப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் இந்தப் பதிவை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.