சென்னை:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அப்போலோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறினார்.
அப்பலோ மருத்துவ மனையின் மருந்து தொடர்பான புத்தவெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை ரெயின்ட்ரீ ஓட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்பலோ மருத்துவ மனை தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது….
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவது என்ற முடிவை முதல்வர் ஜெயலலிதாவே எடுப்பார் என்று பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.

Patrikai.com official YouTube Channel