
பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள சைத்தான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்சியில் எல்லோருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை படக்குழு தந்தது அது என்னவென்றால் இந்த திரைப்படத்தின் டிரெய்லரை திரையிடுவதற்கு பதிலாக படத்திலிருந்து 5 நிமிட காட்சி ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் திரையிடப்பட்டது. உண்மையில் அதிர்ச்சிதான் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இந்த மாதிரியான ஒரு செயலை செய்ய யோசிப்பார்கள்தான் அந்த அளவுக்கு யாருக்கும் தாங்கள் தயாரித்த படத்தின் மீது நம்பிக்கை வைத்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இதை கண்ட திரைப்பிரபலங்கள் அந்த 5 நிமிட காட்சியை மட்டும்தான் மேடையில் எல்லோரும் பாராட்டி பேசினர் அந்த அளவுக்கு ஒரு பிரம்மிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது அந்த காட்சி..
Patrikai.com official YouTube Channel