சட்டீஸ்கர்: அரசியல் கட்சிகளும் அரசியல் சாராத அமைப்புகளும் யாராவது ஒருவருடைய கொடும்பாவியை கொளுத்துவதும் அதை பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தடுப்பதும் இந்தியாவில் சர்வசாதாரணமாக காணக்கூடிய ஒரு காட்சி. ஆனால் சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தங்களுக்கு எதிராக உச்சநீதி மன்றத்திற்கு சென்ற சமூக ஆர்வலர்களின் கொடும்பாவிகளை கொளுத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

effigy1

கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆதிவாசிகளின் குடியிருப்புகளை கொளுத்தியது, சல்வா ஜூடும் என்ற ஆயுதமேந்திய கும்பலுடன் சேர்ந்து கொண்டு பாதிக்கபட்ட கிராம மக்களை விசாரிக்க வந்த சமூக ஆர்வலரான சுவாமி அக்னிவேஷை தாக்கியது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டது குறித்து முன்னாள் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஏழு பேரை விசாரிக்கும்படி சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

effigy2

பாதுகாப்பு கடையினருக்கு எதிரான இந்த உத்தரவுக்கு காரணமாக இருந்த மனுவை உச்சநீதி மன்றத்தில் அளித்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மணீஷ் குஞ்சம், டெல்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் நந்தினி சுந்தர், சமூக ஆர்வலர்கள் ஹிமான்ஷூ குமார், பெலா பாட்டியா, ஆம் ஆத்மி தலைவர் சோனி சோரி மற்றும் பத்திரிகையாளர் மாலினி சுப்ரமணியம் ஆகியோராவர்.
எனவே அவர்கள் மீது ஆத்திரமடைந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மேற்கண்டவர்களின் கொடும்பாவிகளை கொளுத்தியதோடு மட்டுமல்லாமல் தங்கள் பலத்தை காட்டும்டிக்கு அப்பகுதியில் ஊர்வலமும் நடத்தியுள்ளனர்.