டில்லி,
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை விசாரிக்க உச்சநீதிமன்றடம விசாரிக்க முடியாது. அதற்கு அதிகாரம் இல்லை..மத்திய அரசு வாதம் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.\
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க அதிகாரமுள்ளதா? என்ற வழக்கில், தனது எழுத்துப்பூர்வ வாதங்களை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

அதில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பே இறுதியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நடுவர் மன்ற தீர்ப்பே இறுதியானது என்பதால், அதில் மாற்றங்கள் தேவையில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த வழக்கில் தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி அரசுகள் தங்களது வாதத்தை தாக்கல் செய்துள்ளன.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது என தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் வாதிடும்நிலையில்,
மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு ஆகியவைகள் இதில் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன.
இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசும் தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel