சென்னை,
திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதிக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் அவரை பார்கக வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
karnu
திமுக தலைவர் கருணாநிதிக்கு 93 வயதாகிறது. வயது முதிர்வால் அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படுவதும், குணமாவதும் சகஜம். தற்போது அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக திமுக அறிவிப்பு செய்துள்ளது.
இதுகுறித்து திமுக விடுத்துள்ள அறிக்கையில்,
தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள்.
மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.