சென்னை,
தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று இரண்டாவது முறையாக கூடுகிறது.
இன்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனையின் அறிவிப்பை தொடர்ந்து,
கவர்னரின் அறிவுறுத்தலின் பேரில்
முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அரசுத் துறைகள் அனைத்தும், நிதி அமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்கும் அவரே தலைமை வகிப்பார் என ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஏற்கெனவே பிறப்பித்த தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
தற்போது முதல்வர் ஜெயலலிதா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் போல் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா இருக்கிறார்,
இதையடுத்து, கடந்த 19-ந்தேதி நிதி அமைச்சர்.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை முதல் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மீண்டும் அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று ( திங்கள்கிழமை) நடைபெறவிருக்கிறது.
இதில், காவிரி விவகாரம் உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கும் வேளையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டிருப்பது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.