சென்னை,
ரசியல் லாபத்துக்காக  திமுக கூட்டும் அனைத்துகட்சி கூட்டத்தினால் எந்த பயனும் ஏற்படபோவது இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்படி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அரசு அதற்கான எந்த முயற்சியும் எடுக்காததால், தானே அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்ததார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின்,வருகிற 25-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் தமிழத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும், அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
tamil
அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தை கள், ம.தி.மு.க., இந்திய கம்யூ னிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதே போல் அனைத்து விவசாய சங்க அமைப்பு தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பெயருக்கு கடிதம் எழுதி தலைமை கழகத்துக்கு ஆள் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகத் தில் உள்ளவர்கள் வாங்க மறுத்து விட்டனர். அதனால் கொரியர் மூலம் தபால் அனுப்பப்பட்டு உள்ளது.
 
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வோம் என அறிவித்துள்ளார். திமுக ஆதரவு கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று கூறி வருகிறது.
ஆனால், தமிழக பாஜக, அதிமுக கட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறி வருகிறது.
இந்த நிலையில், திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டம் தேவையற்றது என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை சென்ற தமிழிசை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது,  காவிரி விவகாரத்தில் திமுக அரசியல் லாபத்திற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
அனைத்து கட்சி கூட்டத்தினால், தமிழக விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படாது என்றும் கருத்து தெரிவித்தார்.
திமுக நடத்த உள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பங்கேற்காது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.