சென்னை:
இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையிலேயே ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22ம்தேதி சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் அவருக்கு ஜூரம் என்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவரை நலம்விசாரிக்க வந்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட எவரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. காவிரி விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் செய்தி வெளியானது. ஆனால் அவரது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இதுவும் சர்ச்சையானது.
இடையிடையே அதிர்ச்சிகரமான வதந்திகள் பரவுவதும், மருத்துவமனை தரப்பில் “நலமுடன் இருக்கிறார்” என்று அறிவிப்பு வருவதும் வழக்கமாயின. இடையில் லண்டனில் இருந்து மருத்துவர் வந்து சென்றார். நேற்று, டில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவக்குழு வந்தது.
இந்த நிலையில் அப்போலோ மருத்துவக்குழு தரப்பில், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, முதல்வர் ஜெயலலிதா இப்போதைக்கு டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.