சிரியா:
கிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க கூட்டணிப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த 62 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதன் காரணமாக சிரியாவில் பதட்டம் ஏற்பட்டது.
இந்த வான் வெளி தாக்குதலில் தீவிரவாதிகளை குறி வைத்தபோது தவறுதலாக சிரிய ராணுவ வீரர்கள் முகாம் மீது தாக்குதல் நடைபெற்றுவிட்டது என் அமெரிக்கா வருத்தம் தெரிவித்து உள்ளது.
இந்த செயலை ரஷ்யா வன்மையாக கண்டித்திருக்கிறது. போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள சூழலில் இது போன்ற தாக்குதல்கள் ஒப்பந்தத்த முறித்துவிடும் என்று எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா உடனடியாக தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளது.