2china1பீய்ஜிங்:
சீனா பார்லிமென்ட்டில் மாகாண உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 45 பேர் லஞ்சம் கொடுத்தும் மோசடி செய்தும் எம்.பி. பதவியை பிடித்தது விசாரணையில்  தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இது குறித்து சீனாவின் ஜிங்கூவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் எனப்படும் பார்லியில் உள்ள 100 எம்.பி.க்கள், பல்வேறு மாகாண சபை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகிறன்றனர்.
இவர்களின் 45 பேர் லஞ்சம் கொடுத்தும், மோசடி செய்தும் எம்.பி. பதவியை பிடித்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது. இதில் சீனாவின் லியோனிங் மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்த 45 எம்.பி.க்கள் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவில் நடைபெறுமா?