தஞ்சை:
நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வரும் 16ந்தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர்.
தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.சுப்ரீம் கோர்ட் வழங்கிய இந்த தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவில் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
1delta
கர்நாடக முதல்வர் சித்தராமையா, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்தார்.   அதன்படி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.  கபினி அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 5,000 கன அடி நீரும் திறக்கப்பட்டது. காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரானது இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தை வந்துசேரும் என்று தெரிகிறது.
இதற்கிடையில்,  காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூரில் வருகின்ற 16ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
போராட்டத்தின் போது, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  மேலும்  கர்நாடக திறந்துவிடும்  13 டி.எம்சி நீர் காவிரி பாசனத்துக்கு போதாது என்பதால் கர்நாடகவிடம் கூடுதல்நீரை பெற்று தர தமிழக அரசை வலியுறுத்துவது உள்பட பல்வேறு தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.