சென்னை:
சிறுசேரியில் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஸ் ஐடி கம்பெனியில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்த, சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, சிப்காட் வளாகத்தில் வேலை செய்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் கற்பழித்து செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக மேற்குவங்க மாநில கட்டிட தொழிலாளிகளான உத்தம் மண்டல் (24), ராம் மண்டல் (21) , உஜ்ஜன் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து உமாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பணிக்கு சென்ற உமா மகேஸ்வரி வீடு திரும்பவில்லை. இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் உமா கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்த்து. அவரது உடல் பிப்ரவரி 22-ந்தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில், கழுத்து அறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் கண்டு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கை செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு விசாரித்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் 3 வாலிபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தண்டனையை எதிர்த்து 3 வாலிபர்களும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் பெஞ்சுகக்கு வந்தது.
விசாரணையில், உமா மகேஸ்வரி கொலை குறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியிடமும், அரசு வக்கீலிடமும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். நீதிபதிகளின் கேள்விகளுக்கு போலீசார் சரிவர பதில் அளிக்காததால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து 3 வாலிபர்களும் விடுதலையாகும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து அடுத்த விசாரணையின்போது, ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் மகாராஜாவை ஆஜராகி வாதிடும்படி நீதிபதிகள் கூறினார்கள். இதையடுத்து அரசு பிளீடர் மகாராஜா வாதிட்டார். வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதிகள் தஙக்ள் தீர்ப்பில், ‘உமா மகேஸ்வரியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதனால், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றும், உஜ்ஜல் மண்டல் உள்ளிட்ட 3 வாலிபர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்’ என்று நீதிபதிகள் கூறினர்.