சென்னை:
பி.எட் கல்வியியல் தொழிற்படிப்புக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று காலை 9 மணி பி.எட் படிப்புகககான கவுன்சில் தொடங்குகிறது.
இதன்மூலம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கும், 7 அரசு கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெரும் தனியார் கல்லூரிகளுக்கும் இன்று கவுன்சிலிங் நடைபெற இருக்கிறது.
மொத்தம் 1777 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இதுவரை மொத்தம் 3736பேர் பி.எட் படிக்க விண்ணப்பத்தித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடைபெறும்..
நாளை நடைபெறும் கவுன்சிலிங்கில், தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தவர்களுக்கான கவுன்சிலிங்கம், நாளை மறுநாள், வரலாறு பாடம் மற்றும் பி.இ., – பி.டெக்., முடித்தவர்களுக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கும் நடைபெற இருக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 25ம் தேதி அரசு விடுமுறை. அதையடுத்து வரும் 26ந் தேதி தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்தவர்களுக்கம், 27ல், இயற்பியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல் படித்தவர்களுக்கும், 28ல் வேதியியல், புவியியல், கணினி அறிவியல் படித்தவர்களுக்கம் ஆகஸ்டு 30ந் தேதி கணித பாடங்கள் படித்தவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.