சென்னை:
சென்னை அருகே வண்டலூரில் அமையவிருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நகர்புற வளர்ச்சிதுறை மானிய கோரிக்கை யின்போது பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சென்னை அருகே அமையவிருந்த புறநகர் பேருந்து நிலையம் வண்டலூரில் நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினை காரணமாக அருகே உள்ள கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார்.

இதற்காக வீட்டு வசதித் துறை நிலத்தை போக்குவரத்து துறைக்கு உரிமை மாற்றும் பணி நடந்து வருவதாகவும் கூறினார்.
மேலும், சென்னையில் உள்ள பழைய வணிக வளாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ரூ.128 கோடியில் நவீன வசதிகளுடன் பதிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் ரூ.20 கோடியில் பழுதுபார்க்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
Patrikai.com official YouTube Channel