💥 ஜல்லிக்கட்டு ஆபத்தானது என்ற மத்திய அமைச்சர் மேனகாவின் கருத்தில் உடன்பாடில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் மேனகா, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டு பழமையான விளையாட்டாக இருந்தாலும் அபாயகரமான, ஆபத்தான விளையாட்டு எனக்கூறினார்.
1ponnar
இது தொடர்பாக நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு ஆபத்தானது என்ற கருத்தில் உடன்பாடில்லை. கிரிக்கெட், கபடி போன்றவை கூட ஆபத்தானவை தான். வரும் 2017 பொங்கல் விழாவை ஜல்லிக்கட்டுடன் கூடிய விழாவாக நடத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
💥ஜம்மு-காஷ்மீர் மாநில உள்துறை முதன்மை செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பு: ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் 34-வது பிரிவின் அதிகாரங்களுக்கு உட்பட்டு, 28 கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.  அவர்களின் எஞ்சிய சிறைத் தண்டனை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விடுதலை செய்யப்பட்டுள்ள 28 கைதிகளில் ஒருவர், ஆயுள் கைதி.
💥மும்பை: மகாராஷ்ட்டிராவில் 6 பேரை கொலை செய்த டாக்டர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தாரா மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் சந்தோஷ்பால் . ஹோமியோபதி டாக்டரான இவர் ஒரு அங்கன்வாடி பெண் ஊழியரை வீட்டில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் வெளியே தெரிந்ததும் போலீசார் இவரை கைது செய்தனர். இவரது வீட்டு தோட்டத்தில் இருந்து 4 பெண் மற்றும் ஒரு ஆண் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை யாவும் கொலை செய்து மண்ணிற்குள் புதைத்து வைத்துள்ளார். கொலைக்கான காரணம் ஏதும் வெளியிடப்படவில்லை.
💥திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதாக 2 ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். 2 ஆசிரியர்களை கண்டித்து கருமாரப்பட்டி ஊராட்சி இன்றிய பள்ளிக்கு மாணவர்கள் பூட்டு போட்டனர். ஆசிரியர் மீது நடவடிக்கை என கீழ்பென்னாத்தூர் தாசில்தார் உறுதியை அடுத்து பள்ளி திறக்கப்பட்டது.
6-vellain
💥 காவிரி பிரச்சனைக்காக 2 விவசாய சங்கங்களும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தினால் முழு ஆதரவு தரப்படும் என்றும் வெள்ளையன் தகவல் தெரிவித்துள்ளார். 2 விவசாய சங்கங்களும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
💥 காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திடம் நஷ்டஈடு கேட்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசு நஷ்டஈடு தர கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நஷ்டஈடாக கர்நாடக அரசு ரூ.2,480 கோடி தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை 2013-ம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
💥ககோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, குப்பை கிடங்கை முற்றுகையிட்டு ராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
💥 திருத்தணி: திருத்தணி அருகே கழிவு நீர் கலந்த நீரை பருகியதில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதால் இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
7-ramdos
💥மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல். அணைக்கட்டும் திட்டத்தை தடுத்த கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். காவிரியில் புதிய அணை ரூ.5912 கோடியில் கட்டப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
💥 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,988-க்கும், ஒரு சவரன் ரூ.23,904-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.51.30-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.47,940-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
💥ஒடிசா அமைச்சரின் ஷூவை கட்டிய உதவியாளர். ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையிலும், மீடியாக்கள் பதிவு செய்து கொண்டிருந்த போது, அமைச்சருக்கு, அவரது தனி உதவியாளர் ஷூவை கட்டி விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
💥ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் காவல் நிலையம் எதிரே உள்ள நிதி நிறுவனத்தில் 5 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் பின்பக்க சுவரில் துளையிட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். காவல் நிலையம் எதிரிலேயே கொள்ளை நிகழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
💥மதுரை: மதுரையில் பெயிண்ட் விற்பனை கடையில் ரூ. 4.60 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. பாண்டிய வெள்ளாளர் தெருவில் உள்ள பெயிண்ட் கடையின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.
💥பதக்க வாய்ப்பை இழந்தார் விகாஷ். ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
💥காவிரி டெல்டா மாவட்டங்களில் 19ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு. காவிரி டெல்டா மாவட்டங்களில் 19ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு த.மா.கா ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் விவசாய சங்கங்களின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வலியுறுத்தி 19ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
Narendra Modi
💥தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரை மிகவும் சலிப்பானதாக இருந்ததால் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தூங்கியிருக்கக் கூடும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
💥ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
8-koondgulam
💥கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மின்உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
💥உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரத்திலேயே உள்ளது. எனவே, தமிழகத்தில் ஏழைகளே இல்லை என்ற நிலையை கொண்டு வருவேன் — சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா
 
💥கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் இணைப்புப் பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்– மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
3-kanyak
💥ஜம்மு-காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 28 கைதிகள், சுதந்திர தினத்தையொட்டி விடுதலை செய்ய அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
💥ராஜஸ்தானில் வீட்டின் மேற்கூரையில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
💥பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் திங்கள்கிழமை ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

💥போர்ச்சுகல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா வரும் ஜனவரியில்(2017) இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்
💥விருதாச்சலம் ரயில் நிலையத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
விருதாச்சலம்: விருதாச்சலம் ரயில் நிலையத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிற்னர். ரயிலில் வங்கி பணம் கொள்ளை போனது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
💥சேலம் ரயில் கொள்ளை, குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. சம்பவம் நடந்த நாளன்று, சேலம், சேத்துப்பட்டு, எழும்பூர் அருகே உள்ள செல்போன் டவர்களில் ராஜஸ்தான் மாநில எண்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநில கொள்ளை கும்பல் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
💥சென்னை வந்த ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, எழும்பூர் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள், உணவக ஊழியர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2-train
💥ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட, 5.75 கோடி ரூபாய் தொடர்பாக, ஈரோட்டில், சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் இரண்டாவது நாளாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டார்.
💥ரயில்வே புதிய கால அட்டவணையில் செந்தூர் எக்ஸ்பிரசின் வழித்தடத்தை மாற்றி அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெற்கு ரயில்வே உறுதிபட தெரிவித்துள்ளது.
💥திண்டுக்கல் விழுப்புரம் இரட்டை ரயில் பாதை பணி, நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும், 113 கி.மீ., தூரமுள்ள பணிகள், 2017 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, இரட்டை ரயில் பாதை பணி முழுமை பெறும். பட்டுக்கோட்டை காரைக்குடி பாதை பணியும் துரிதப்படுத்தப்படும்– திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அகர்வால்.
💥பழனி அருகே சத்திரப்பட்டியில் கடைகளில் தொடர் கொள்ளை போலீசார் விசானை
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
💥தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை எழும்பூர்–ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்: 16713), ராமேஸ்வரம்–சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16714), சென்னை எழும்பூர்–ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16125) ஆகிய ரெயில்கள் டிசம்பர் 10–ந் தேதி முதல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் செய்யப்படுகிறது. அந்த ரெயில்களின் வண்டி எண்ணும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, 16713 என்பது 22661 ஆகவும், 16714 என்பது 22662 ஆகவும், 16125 என்பது 22663 ஆகவும் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ரெயில்களில் அக்டோபர் 1–ந் தேதி முதல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5-vija
💥சுதந்தர தினத்தையொட்டி தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கொடியேற்றினார். ஆனால், அங்கு நடந்த விழாவில் 50 பேர் கூடப் பங்கேற்கவில்லை.
💥தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் சங்கத்தினர் பணிக்கு திரும்பினர் சென்னை: தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் சங்கத்தினர் பணிக்கு திரும்பினர். வழக்கறிஞர் சட்ட விதி திருத்தப்பட்டதை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் சங்கங்கள் போராடி வந்தன. போராட்டத்தின் போது 126 வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால் கோரிக்கையை பரிசீலிப்பதாக பார் கவுன்சில் உறுதி அளித்துள்ளது.
💥முதல் முறையாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு திரைப்படத்திற்கு பாராட்டு… அது விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமாசாமி இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 19 ல் வெளிவரும் தர்மதுரை படமாகும் நேற்று தன் மருத்துவ குடும்பத்துடன் படம் பார்த்த பாமக தலைவர் நெகிழ்ந்து மனதார பாராட்டி பேட்டியும் தந்திருக்கிறார்கள். மருத்துவர்கள் படம் என்பதாலும் அதுவும் எப்போதும்.திரைப்படங்களை காட்டமாக விமர்சிக்கும் பாமக தலைவரின் இப்பேட்டியால் இது முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வாக பார்க்கிறது தர்மதுரை படக்குழு.
💥காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.6000 கோடி மதிப்பில் அணைகட்ட போவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவித்திருப்பதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் உரையாற்றிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.5,912 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார். மேகதாதுவில் விரைவில் அணை கட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு, பெங்களூருவின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றார் அவர்.  சித்தராமைய்யாவின் இந்த பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு தனது முழு சத்தியையும் பயன்படுத்தி கர்நாடக திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய விவசாயிகள், கர்நாடக முதலமைச்சரை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி மேதாதூ மற்றும் ராசிமணல் பகுதிகளில் கர்நாடகம் அணை கட்டுவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
8sargunam
💥 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சற்குண பாண்டியன் மறைவுக்கு இரங்கற் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு நிமிட மவுன அஞ்சலி பேரவையில் செலுத்தப்பட்டது சட்டபேரவை துவங்கியது.
💥காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திடம் நஷ்டஈடு கேட்டு தமிழகம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.
💥நாகர்கோவில் – நாகர்கோயிலை அடுத்த மீனாட்சிபுரம் சாலையில் உள்ள நாராயணன் என்பவரது டெய்லர் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 11800 ரூபாய் பணம் மற்றும் பக்கத்து கடை பூட்டை உடைத்து கடையில் இருந்த 13000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை
💥 126 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பார் கவுன்சில்.
💥 வேலூர் ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் தொடர்கிறது வழக்கறிஞ்சர்களின் புறக்கனிப்பு
💥 திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை பங்கேற்கிறார். கோபாலபுர இல்லத்தில் இருந்து தற்போது புறப்பட்டு விட்டார்..
💥 குன்ஹாவின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு ஜனவரி 26ம் தேதிக்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும், தேவையான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் மதுரை உயர்நீதி மன்னறத்தில் வழக்கு தொடரப்போவதாக டிராபிக்ராமசாமி திருச்சி ஸ்ரீரங்கத்தில் பேட்டி.
💥 ஏமனில் மருத்துவனை மீது தாக்குதல்: 11 பேர் பலி! கிளர்ச்சியாளர்கள் கைவசம் உள்ள சனா நகரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல். அங்குள்ள மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்; 19 பேர் காயம். இத்தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!
4-gold
💥தங்கம் விலை உயர்வு! 22 கேரட் தங்கம் ஒரு கிராம் – ரூ.2,98822 கேரட் தங்கம் ஒரு சவரன் – ரூ.23,90424 கேரட் தங்கம் 10 கிராம் – ரூ.31,960வெள்ளி: ஒரு கிராம் – ரூ.51.30வெள்ளி கட்டி: ஒரு கிலோ – ரூ.47,940
💥நாளை கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் திறப்பு! பாசனத்திற்காக நாளை கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் திறக்கப்படுகிறது. முதல் போக பாசனத்திற்காக இதிலிருந்து நீரைத் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன!
‘💥மேகதாது திட்டத்தை தடுக்க வேண்டும்: ராமதாஸ்! மேகதாதில் காவிரியின் குறுக்கே ₹5912 கோடி செலவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
💥மருத்துவ முகாம்கள் நடத்த விஷால் முடிவு! திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் திடீர் மறைவுக்கு நடிகர் சங்கத் தலைவர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைக் கலைஞர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த இதுவே சரியான தருணம் இதுவே என்று ட்வீட்டியுள்ளார் விஷால். “முதலில் திரையுலகினர் சில பழக்கவழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் அல்லது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்!
💥சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டீபன் என்பவர் 400 கிலோ பொட்டாசியம் சயனைட்டை விற்பனை செய்துள்ளார்.இவர் இந்த வேதியியல் பொருளை ஊசி மூலம் செலுத்தி 3 பேரை கொலை செய்துள்ளார்.இவர் மேலும் பதுக்கிவைத்திடுக்கும் பொட்டாசியம் சயனைட்டை போலீசார் தேடி வருகின்றனர்.