சென்னை:
சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அடுக்கு மாடி ரெயில் விட இந்திய ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக சதர்ன் ரெயில்வே அறிவித்து உள்ளது.
சென்னை – திருவனந்தபுரம் இடையே அடுக்குமாடி அதிவேக சூப்பர்பாஸ்ட் அடுக்கு மாடி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க சதர்ன் ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரெயிலுக்கு உதய் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை திருவனந்தபுரம் சென்றடையும்.
தற்போது சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்ல 16 முதல் 18 மணி நேரம் ஆகிறது. ஆனால் உதய் ரெயில் 14 மணி நேரத்தில் திருவனந்தபுரம் சென்றடையும் ரெயில்வே அறிவித்துள்ளது.
மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரெயிலில் ஏசி வசதி கொண்ட 11 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும் என்றும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 120 பயணிகள் பயணம் செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது.