சென்னை:
ழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர,  ஐகோர்ட்டு அனைத்து கோர்ட்டு நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையில்  அனைத்து நீதிபதிகள் கலந்துகொண்ட கூட்டம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்றது. அதில்  எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கையில் அனுப்பப்பட்டுள்ளது.
layers
  சுற்றறிக்கை விவரம்:

  • வழக்கறிஞர்கள், வழக்கில் ஆஜராகவில்லை என்றால், வழக்கில் தொடர்புடைய கட்சிக்காரர்கள் ஆஜராகி வாதாடவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்க வேண்டும்.
  • அப்போது, வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வக்காலத்து மனுவை ரத்து செய்ய வேண்டும். இதை வழக்கறிஞர்கள் யாராவது தடுத்தால், மாவட்ட முதன்மை நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட நீதிபதிகள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்யவேண்டும்.
  • மாவட்ட அளவில் போலீஸ் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • எந்த நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் பாதுகாப்பு தேவை என்றால், அந்த படையை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
  • கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் சார்பில் ஜாமீன் கேட்டு, அவரது நெருங்கிய உறவினர்கள் நேரடியாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
  • சிறையில் இருக்கும் நபர்கள் ஜாமீன் கேட்டு சிறையில் இருந்தபடியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், அந்த மனு கையால் எழுதப்பட்டதாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டால், சிறையில் இருந்து அழைத்து வர உத்தரவிட வேண்டும்.
  • கைதிகளிடம் ஜாமீன் மனு மீது காணொலி காட்சி (விடியோ கான்பரன்சிங்) வசதி உள்ள நீதிமன்றங்கள் விசாரணை நடத்தலாம்.
  • தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழு நீதிபதிகள், வாரத்துக்கு இருமுறை சிறைகளுக்குச் சென்று, கைதிகளிடம் ஜாமீன் மனுவை பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • அந்த மனு குறித்து போலீஸ் தரப்பின் வாதத்தை கேட்டறிந்து, தகுந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிபதிகள் பிறப்பிக்கவேண்டும்.

இவ்வறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வழக்கறிஞர்கள் சங்கம் கூறியதாவது: வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும். வழக்கறிஞர்களின் தொழிலை நசுக்கும் செயல்களில் தலைமை நீதிபதி ஈடுபட்டு வருவதாக வழக்கறிஞர்கள்  குற்றம்சாட்டினர். நாளை மதுரையில் நடக்கும் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்.