மும்பை:
பாங்க் ஆஃப் பரோடா தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வணிக வங்கிகளின் விதிகளை மீறி நாணய மற்றும் நிதி பரிமாற்றம் செய்துள்ளது என மார்ச் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதன் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மீது 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
மார்ச் 2016ஆம் ஆண்டுச் சிபிஐ பதிவு செய்த வழக்கில், பாங்க் ஆஃப் பரோடா வணிக வங்கிகளின் விதிகளை மீறி வெளிநாடுகளில் இருக்கும் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக நிதி பரிமாற்றம் மற்றும் நாணய பரிமாற்றம செய்துள்ளது. இத்தகைய பரிமாற்றத்தில் சுமார் 6,000 கோடி ரூபாய் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது.
59 வெளிநாட்டு கணக்குகள் இந்த பண பரிமாற்றத்தை செய்துள்ளதாக தெரிகிறது. இதில் முறைகேடாக நடந்த பண பரிமாற்றம் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டதாக சிபிஐ கூறியுள்ளது. மேலும் இந்த பண பரிமாற்றம் அதிக அளவில் ஹாங்காங் நாட்டை சேர்ந்துள்ளது.
இதையடுத்து பாங்க் ஆப் பரோடாவின் தலைமையகத்தை சிபிஐ சோதனை யிட்டு முக்கிய தகவல்களை கைப்பற்றி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.